3 Jul 2011

ட்விட்டரை தமிழ்ப்படுத்த வாக்களிப்பீர்

தமிழுக்காக, பத்து நிமிடங்கள் செலவிட நேரமிருப்பின் தொடர்ந்து வாசியுங்கள்!

'கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்' என்ற முழக்கத்தை அடிநாதமாக கொண்டு ட்விட்டரில் சில பணிகளை செய்து வருகிறோம். முதலாவது, கற்பித்தலின் ஆக்கமாக அலைபேசியிலும் கணினியிலும் தமிழ் எழுதும் வழிகளை எளிமைப்படுத்தி தொகுத்துள்ளோம் http://j.mp/TypeTamil பார்க்க . ட்விட்டர் பயன்படுத்துவது குறித்த எளிமையான கையேடு ஒன்றும் எழுதி வருகிறோம் விரைவில் வெளிவிடுவோம். ட்விட்டர் Tutorial கட்டுரைகள் மற்றும் காணொளிகளுக்காக தனி தளமும் அமைத்து வருகிறோம்

இரண்டாவது, ஒன்றுபடுத்துதலின் ஆக்கமாக தமிழ் ட்விட்டர்களுக்கான directory தளம் அமைக்க உள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தோழர் கிருபா சங்கர் துவங்கியுள்ளார். மாவட்டவாரியாக, தொழில்வாரியாக மக்களை ஒன்றுபடுத்திடவும் தேடவும் இயலும், அதன் மூலம் இணையத்தில் தமிழன் குரலை ஒன்றாக்கி ஓங்கி ஒலிக்கச் செய்வோம். இணையத்தின் வெளியேயும் தமிழ்/தமிழர் என்ற அடிப்படையில் இணைப்போம். தமிழ் ட்விட்டர் பயனர்களை அதிகரிப்பது இம்முயற்சிகளின் முக்கிய நோக்கம்.

மூன்றாவது, புரட்சி என்பது உங்கள் சிந்தனையின் விளைவாக நிகழும். ட்விட்டரை மக்களின் மனசாட்சியின் வெளிப்பாடாக்குவது, கற்றற்ற சுயசிந்தனை ஏற்படுத்துவது. சாதாரண மக்களின் கட்டற்ற ஊடகமாக்குவது. OpenMedia ஆனது OpenGovernance க்கு வழிவகுக்க வேண்டுமென்பதே எம் ஆவல். பல நண்பர்களின் பங்களிப்புகளோடு நடக்கும் இம்முயற்சிகளில் உங்கள் சிறு பங்களிப்பாவது இருக்க வேண்டாமா? இருக்க வேண்டும் ஏன் விரும்புகிறீர்களா? அதற்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்குங்கள் போதும்!


நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்!!

முதலாவது காரியம்..
i. சாதாரண அலைபேசிகளில் sms மூலமாகவே ட்விட் செய்ய இயலும். இதற்குதவும் smstweet.in எனும் தளம் ஆங்கில ட்விட்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. Unicode sms களை ஏற்றுக் கொண்டால் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ட்விட்ட இயலும் இல்லையா?. அதற்கு அவர்களிடம் feedback கோரிக்கை வைத்துள்ளோம். நீங்கள் அதற்கு வாக்களிக்க வேண்டுகிறேன். முதலில் smstweet.in தளத்தில் இணையவும். அது எளிது தான், Signin With Twitter எனும் Oauth button ஐ click செய்து உங்கள் ட்விட்டர் கணக்கில் இணையவும். பின்னர் இங்கே http://bit.ly/VOTEsmstweet சென்று நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு மொத்தம் 10 ஓட்டுகள் வழங்குவர். ஆனால் அதில் அதிகபட்சம் 3 ஓட்டுகள் மட்டுமே ஒரு கோரிக்கைக்கு பயன்படுத்த இயலும். நினைவில் கொள்க smstweet.in தளத்தில் இணைந்தால் மட்டுமே இங்கே உங்களால் வாக்களிக்க முடியும். unicode sms களை ஏற்றுக்கொள்ளுங்கள் என பணிவுடன் comment ம் எழுதுங்கள். இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டால் இந்தியாவில் எந்த மொழிக்காரனும் சாதாரண அலைபேசி மூலமே அவரவர் மொழியில் ட்விட்ட இயலும்! நம் தமிழிலும் முடியும். இது சாத்தியமானால் நாம் தமிழில் ட்விட் செய்ய இனி ஒரு sms போதுமே!

இரண்டாவது காரியம்...

ii. ட்விட்டர், உலகின் பல்வேறு மொழிகளில் தன் சேவைகளை வழங்குகிறது. 80மில்லியன் மக்கள் பேசும் மொழி மற்றும் உலகின் மிகத்தொன்மையான நம் மொழி தமிழில் ஏன் வழங்க கூடாது? நீங்கள் தாராளமாக கேட்கலாம். இங்கே http://bit.ly/SubmitTamil தமிழ் மொழியை தேர்வு செய்து, உங்கள் கோரிக்கையும் ஆங்கிலத்தில் comment box ல் பதிவு செய்து விருப்பபட்ட screen name கொடுத்து submit செய்யுங்கள்! நம் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் இந்திய மொழிகளில் ட்விட்டர் முதலில் தமிழில் தான் வரும். மொழிமாற்றம் செய்வதில் பங்கெடுப்பது எங்கள் பொறுப்பு. நம் மொழியை உள் நுழைப்பது உங்கள் கடமை. நீங்கள் வாக்களிப்பதன் மூலம் " இத்தனை பேர் தமிழில் ட்விட்டரை வெளிவிட ஆதரவளிக்கிறோம்" னு காட்டுகிறோம். அத்தோடு ட்விட்டர்ல Translator இவருக்கும் ஒரு @translator போட்டு பணிவா ஆங்கிலத்துல கோரிக்கை வைங்க

கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க, ட்விட்டர் மட்டும் தமிழ் ல வந்தால் எந்த மென்பொருள் தேவையுமின்றி twitter.comல தமிழ் எழுத இயலும். எதிர்காலத்தில் தமிழக அரசு அதனை தன் செய்தி ஓடையாக கூட பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. சுப்ரமணிய சுவாமி போல மற்ற தமிழ் அரசியல்வாதிகளும் ட்விட்டர பயன்படுத்தட்டும். காவல்துறையும் மற்ற அரசுத்துறைகளும் ட்விட்டர் வழியா செய்திகளை பகிரட்டும். தமிழகத்தின் முக்கியமான செய்தித்தாள்கள் த்விட்டேர்ல இருப்பதால மக்கள் அவற்றை தொடர்பு கொள்வதும் எளிதாகும். நாம் எதிர்பார்க்கும் #OpenMedia #OpenGovernance அது தானே! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! நல்லது நினையுங்க! நல்லதே நடக்கும்! ஓட்டு போட்டு தமிழைப் பரப்பலாம் வாங்க!


கீழே உள்ள Tweet buttonனை click செய்து உங்கள் நண்பர்களுக்கும் இந்த சேதியைச் சேர்த்து அவர்களையும் ஓட்டு போட சொல்லுங்க!இந்த பதிவை விரித்து/சுருக்கி தங்கள் Blogல் பதிவிடவும்/பரப்பவும் தடை ஏதுமில்லை! எப்படியாயினும் ட்விட்டரை தமிழில் கொண்டு வரணும்! தயை கூர்ந்து உதவுங்க!

இது குறித்து வேறு முயற்சிகள் செய்யலாம் எனத் தோன்றினால் ட்விட்டரில் என்னுடன் பகிர்ந்திடுவீர்

6 comments:

 1. Ya sure i will post in #

  http:// Www.vidiyalai-nokki.blogspot.com

  in blog if you can give me a logo of you i will link it..

  ReplyDelete
 2. தற்போது பலரும் விரும்பும் Android அலைபேசிகளில் தமிழ் font ஐ சரியாக காண முடிவதில்லை google இடம் இதற்கும் நாம் ஒரு விண்ணப்பம் விடுக்கலாமே.

  ReplyDelete
 3. nalla muyarchi..paaaaraaattukkal.

  ReplyDelete
 4. கண்டிப்பா முயற்சி செய்வோம்க! வாக்களித்துவிட்டேன்! :-)

  ReplyDelete

உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!