5 ஆக., 2012

கனவில் தோன்றிய கதை!

நண்பனிடமிருந்து அழைப்பு! தோழி மரணப்படுக்கையில் இருக்கிறார் பார்க்க வந்துடுன்னான்.

சரி  மச்சான்,போய் சேர்ந்ததும் ஒரு ட்வீட் போடு!
அடி செருப்பால, என்னடா சொல்ற?
அய்யய்யோ.. தப்பா நெனைக்காதடா. அங்கிட்டு போயி இறங்கினதும் ஒரு மிஸ்டு கொடு!

எப்படி இருக்கிங்க செல்வி? கவலைப்படாதிங்க. ஒன்னும் ஆகாது.  டாக்டர் என்ன கடவுளா உங்களுக்கு நாள் குறிக்க. நீங்க கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளோட சந்தோசமா வாழப்போறிங்க!
இப்ப  நீங்க என்ன ஜோசியரா? நாள் குறிக்கிரிங்க..? :)
:) நாள் குறிக்கிறது என்ன, மாப்ள கூட பார்த்துட்டேன். அடிமை இப்போ வந்துட்டே இருக்கான். உங்க பேரன்ட்ஸ விட உங்கள நல்லா பார்த்துக்க கூடிய ஒருத்தன் அவன் தான்.
யாரு அந்த அடிமை. பாவம் விட்ருங்க. அவராது சந்தோசமா வாழட்டும். என் சாவ எதிர்பார்த்து சங்கடப்பட வேணாம். :)
நீங்க  எதுவும் பேச வேணாம்.திருமணம் வேணாம்னு உங்க வாய்ல இருந்து வரலையே. அதுலையே புரிஞ்சுக்கிட்டேன். அடிமை யாருன்னும் ஊகிச்சிட்டிங்கன்னு நினைக்கிறேன். ;) இருங்க.. இதோ வந்திடுறேன்.

டேய் மச்சான், எங்கடா இருக்க?
என்னடா,அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் போயிட்டியா? ஆறுதலா பேசுனியா? நான் என்ன பேசுறது?
நீ எங்கிட்டு இருக்கன்னு தான் கேட்டேன். அறிவுக்கொழுந்து. நீ ஒரு ஆறுதலும் சொல்ல வேணாம். ஹாஸ்பிட்டலுக்கும் போக வேணாம். உடனே கெளம்பி செல்வி வீட்டுக்கு வந்து சேரு!
என்னாச்சுடா? போய்ட்டாளா?
அபசகுனம் புடிச்சவனே... வந்து சேருடா..

வாடா மச்சான். இதுக்காது சொன்னபடி வந்தியே! என் கல்யாணத்துக்கு நீ வரல.. உன் கல்யாணத்த நான் தான் நடத்தி வைக்கப் போறேன். 
என்னடா சொல்ற?? புரியல..
உனக்கு ஒரு புண்ணாக்கும் புரிய வேணாம். செல்விய கல்யாணம் பண்ணிக்க.
( யோசனையுடன்..) சரிடா..

ஒரு ஓரமா நீங்க என்ன விரும்புறது தெரியும். கல்யாணம் செய்துக்கலாம். ஆனா ஒரு மனைவியா நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும். நான் செத்த பின்ன வேற கல்யாணம் செய்துப்பிங்களா?
ம். கண்டிப்பா செய்துக்கிறேன். ஆனா நூறு வயசு கிழவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்க.
ஹா ஹா.. அதென்ன நூறு வருஷம்..? போதுமா..?
போதாது தான். வேணும்னா பூமி அழியுற வரை வாழ்வோமே! :)

( இவ்வளவு வருஷம் அலைய விட்டு இப்பவாது இறக்கம் வந்ததே..) நீங்க என் மனைவியாகுற சந்தோசமே போதும். அதை விட இந்த உலகத்துல எனக்கு பெருசா ஏதும் இல்ல.
என் பேரு செல்வி.. 'நீங்க' இல்ல.. :)

வா செல்வி போலாம்.. மச்சான்...
கெளம்பிட்டேன்.. போலாம்.. 

அவள் உடலில் கேன்சர் பாதிக்காத செல்கள் போல என்னிடம் நம்பிக்கையும் நிறைய இருக்கிறது. அவநம்பிக்கையை தான் அழிக்க வேண்டும். அவளின் வயதான பெற்றோரால் முடியாமல் போகலாம். காலனோடு மோதி நான் மீட்டு வருவேன்.

Tweet : "தம்பதிகளாய் நூறாண்டு வாழப்போகிறோம். ஆசீர்வதியுங்கள்! வாழ்த்துங்கள்!"

நண்பன் செய்து விட்டான்.

தொடக்கம்!