17 அக்., 2011

தமிழ் ட்விட்டர் : முதல் பதில் கிடைத்ததுதமிழில்  ட்விட்டர் தளத்தை வெளியிட/மொழிபெயர்க்க கேட்டு என்ன செய்கலாம் என ஒரு பதிவு எழுதி இருந்தேன்.  இருநூறுக்கும் மேலானோரின் ஆதரவு கிட்டியது.. வாக்களித்தீர்கள், நன்றி தோழர்களே!  நமது கோரிக்கை நிறைவேற்றப்பட இன்னும் நிறைய பேர் தமிழ் த்விட்டருக்காக பதிவு செய்ய வேண்டும். த்விட்டர் தளத்தில் SignIn ஆகி பின் இந்த இணைப்பில் Tamil தனை தேர்வு செய்து Submit செய்யவும். இதன் மூலம் தமிழ் த்விட்டருக்கான உங்கள் வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். தற்போது நம் கோரிக்கைகள் ஏற்கப்படும் காலம் கனிந்துள்ளது. எப்படி என முதலில் சொல்கிறேன், இறுதியாக நீங்கள் எப்படி வேண்டுகோள் வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளேன். 

ட்விட்டர் புதிதாக ஆறு மொழிகளில் தன் சேவைகளை விரிவுபடுத்தியது. அதில் இந்தியும் ஒன்று.

http://twitter.com/translator/status/114112947818729472

அண்மையில் ட்விட்டர் தளத்தின் நிறுவனர் @jack ட்விட்டர் குறித்த கருத்துக்களை, அவரோடு பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்த கீச்சினை தோழர் @dheebakg வழியாக அறிந்தேன்! 

http://twitter.com/jack/status/121637765657010178

அந்த ட்வீட் க்கு Reply செய்து தமிழ் மொழியில் ட்விட்டரை வழங்கும்படி கேட்டு இருந்தேன்.

http://twitter.com/karaiyaan/status/122000497979817984 

என் வேண்டுகோளுக்கு மறுமொழியாக @translator இடமிருந்து ஒரு DM வந்தது.  
DM from Translator


பின்னர் அவர்களின் கனிவான மறுமொழிக்கு நன்றி கூறினேன்

http://twitter.com/karaiyaan/status/122587582017175552


இது தான் நான் செய்தது: Jack Dorsey அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன், அவர்கள் பதில் அனுப்பினார்கள். நான் நன்றி கூறினேன். இந்த வழிமுறையில் ட்விட்டர் தள இயக்குனருடனும், மொழிபெயர்ப்பு சேவை தலைமையுடனும் நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது. நான் ஒருவன் மட்டும் கோரிக்கை வைத்தால் போதுமா? நீங்களும் கோரிக்கை வைக்கலாமே? அதற்க்கு வேண்டிக் கேட்டுக் கொள்ளவே இந்த பதிவு.

ஆனால் ஒரு விசயம் மிக கண்டிப்பாக கூறுகிறேன்.. ““கோரிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வைக்க வேண்டும், தயவு செய்து தமிழில் எழுதி அவர்களை எரிச்சலுற செய்ய வேண்டாம். அத்தோடு ஆங்கில சொல்லாடல் மிகவும் பணிவான வார்த்தைகளை கொண்டு மட்டுமே அமைக்க வேண்டும்””. இவ்விரண்டும் இருந்தால் உங்களது வேண்டுகோள் தமிழ் ட்விட்டருக்கு மிக அவசியமாய் இருக்கிறது.

இது குறித்து தோழர்  @f5here   உடன் உரையாடினேன், என்னென்ன முறையில் வேண்டுகோள் வைக்கலாம் எனக் கூறினார்

“@jack please provide “tamil” support, one the largest regional language user base in twitter @translator”

“@jack when we get our TAMIL language support like hindi @translator”

“@jack we are using 50+ apps to tweet in tamil, replace them by adding Tamil support @translator”

“@jack tamil enjoying official language status in 3 nations, and have very wide online user base.pls add it in @translator”

“@jack , we tamil are most vibrant regional social media community in the world. please add it in @translator”

“@jack please add tamil in @translator , it is one of the longest surviving classical languages in the world”

 இந்த பதிவினை நண்பர்களுடன்  பகிர்ந்த  போது  பெரும்பாலோர் மேலே  உள்ள  எனது  வேண்டுகோள்  கீச்சினை   RT செய்து  இருந்தீர்கள்.  அப்படி அல்ல,  நீங்கள் செய்ய வேண்டியது  இது  தான் . மேலே இருக்கும் @jack ன் கீச்சில் உள்ள " Reply " Option Click செய்து என்னைப் போல ஆங்கிலத்தில்  வேண்டுகோள் வைக்கணும்.

அந்த  கீச்சு  தான்  அவர் ட்விட்டர்  குறித்த  கருத்துக்களைப் பகிரும்படி  கேட்டு  இருப்பது  . அதற்க்கு தான் நீங்கள்  ஆங்கிலத்தில் வேண்டுகோள்  விடுத்து  Reply செய்யணும். எனது  வேண்டுகோளை  RT செய்வதால் மறுபடி மறுபடி நான் ஒருவன்  மட்டுமே  கெஞ்சிக்  கொண்டிருப்பது  போலாகும். தமிழில்  ட்விட்டர்  வேண்டும்  என  விரும்பும்  ஒவ்வொருவரும்  ,  தனித் தனியே  அவருக்கு  வேண்டுகோள்  விடுத்து,  இத்தனை  பேர்  ஆவலாக  இருக்கிறோம்னு  நமது  எண்ணிக்கையைக்  காட்ட வேண்டும்.

ஆங்கிலத்தில்  கேட்பதில்  சிரமம்  இருப்பவர்களுக்கு  சில  உதாரணங்கள்  கொடுத்துள்ளேன்.  விரும்பினால் இதையோ , இதை விட சிறப்பாகவோ ஆங்கிலத்தில் வேண்டுகோள் விடுங்கள்!. இந்திக்குப் பின் வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியில் ட்விட்டர் வருவதென்றால் அது தமிழில் தான் இருக்க வேண்டும். அந்த முடிவுக்கு அவர்களை வர வைப்பது, நாம் Jack Dorsey க்குப் போடும் Reply ல் , மற்றும் ட்விட்டர் தளத்தில் இந்த இணைப்பில் Tamil ஐத் தேர்ந்தெடுத்து Submit செய்வதில் தான் இருக்கிறது.

 நீங்கள் வேண்டுகோள் விடுத்து  உங்களுக்கு  அதற்க்கு  பதில்  வரவும் வேண்டுமென  விரும்பினால்  @support , @feedback , @translator , @jack , @twitter ட்விட்டர் கணக்குகளை பின்பற்றியாக வேண்டும், அப்போது  தான்  அவர்கள் மறுமொழி அனுப்ப இயலும். நீங்களும் அவர்களுக்கு பதில் DM அனுப்ப இயலும்.  இது  தவிரவும்  ட்விட்டர் குறித்து  மேலும்  வேறு எந்த கருத்து/வேண்டுகோள்  இருந்தாலும்  கூட  நீங்கள் @jack ன் கீச்சின் வழியே ஆங்கிலத்தில் தெரிவிக்கலாம்.ஆனால்  இந்த  கீச்சுக்கு  மறுமொழியாக  தான்  உங்கள்  வேண்டுகோள்  இருக்க  வேண்டும்  என்பதே  முக்கியமான  விடயம். மேலும்  ஏதும்  ஐயங்கள் இருப்பின் ட்விட்டர் வழியே  எனக்கு ( @karaiyaan ) DM  செய்யவும்.

மேலும்  தமிழ்  ட்விட்டர்  குறித்த  உங்களது  கருதுகோள்களை  எங்களுடன் @karaiyaan @vedhaLam @thamiziniyan  பகிர்ந்திடலாம், TwiTamils.com  தமிழ் கீச்சர்களுக்காகவே  துவங்கி  உள்ளோம்.  உங்களின்  ஆதரவு  தேவை தோழர்களே!

நண்பர்களையும்  வாக்களிக்க  வேண்டுகோள்  விடுக்கலாம்!

16 அக்., 2011

#TNfollow பட்டி

     ட்விட்டரில் யாரை பின்பற்றுவது(Follow) செய்வது என்பதை தீர்மானம் செய்வது ரொம்ப சிக்கலானது. முதலில் நமக்கு பிடித்த ஒருவரை ஃபாலோ செய்ய வேண்டும். பின்னர் அவர் யாரை ஃபாலோ செய்கிறாரோ அல்லது, அவரை யார் ஃபாலோ செய்கிறார்களோ, அவர்களில் நமக்கு பிடித்தவர்களை தேடிப்பிடித்து ஃபாலோ செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். வெளிநாட்டு ஆங்கில ட்விட்டர்கள் இந்த வேலைக்கு சுலபமான ஒரு வழி வைத்திருக்கின்றனர். என்னவென்றால் #followfriday என்ற HashTag பட்டியைப் பயன்படுத்துகிறார்கள்.

Hash Tag என்றால் என்ன?

ஹேஷ்டேக் #HashTag என்பது, எதாவது முக்கியமான குறிச்சொல் முன்னர் # என்று போடுவது. உதாரணமாக #ilaiyaraja இளையராஜா பற்றி யாரேனும் எதாவது ட்வீட்டுகின்றனர் என்றால் இந்த #ilaiyaraja ஹேஷ்டேகை அவர்களின் ட்வீட்டில் சேர்க்க வேண்டும். #ilaiyaraja என்கிற ஹேஷ்டேக் ட்வீட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஹேஷ்டேகை யாரேனும் க்ளிக்கினாலோ, அல்லது தேடினாலோ, அந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் உள்ள அனைத்து ட்வீட்டுகளையும் பார்க்க முடியும். ஆகையால், #ilaiyaraja என்ற ஹேஷ்டேகை க்ளிக்கும் போது இளையராஜா பற்றிய அனைத்து ட்வீட்டுகளையும் படிக்க முடியும்.

மிகவும் அதிகம் விவாதிக்கப்படும், பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக், ட்விட்டர் பக்கத்தில் trend listல் வரும். உதாரணமாக, சில வாரங்களுக்கு முன் நடந்த மும்பை குண்டுவெடிப்பின் போது #mumbaiblast என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டில் இருந்தது. இந்த ஹேஷ்டேகை படித்தவர்கள் உடனுக்குடன் மும்பை குண்டுவெடிப்பு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
சரி, #followfriday எப்படி உருவானது? எப்படி வேலை செய்கிறது?
      
     16 ஜனவரி 2009ல் @Micah Baldwin என்பவர் "Iam starting Follow Fridays. Every Friday, suggest a person to follow, and everyone follow him/her" என்று ட்வீட்டினார். அதற்கு அவர் நண்பர்  Mykl Roventine என்பவர் "@micah Great idea! You need a hashtag for that - #followfriday". இது உடனடியாக தீப் போல் பற்றிக் கொண்டது. யார் யார் அவர்களுக்குத் தெரிந்த நல்ல ட்வீட்டர்களை பிறருக்கு அறிமுகப்படுத்த, இந்த #followfriday ஹேஷ்டேகை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

      முதலில் வெள்ளிக்கிழமை மற்ற சக ட்வீட்டர்களை அறிமுகப்படுத்த என்று ஆரம்பித்து பின்னர், என்றைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடியதாகி விட்டது. #followfriday மருவி #FF எனவும் ஆனது. ஆக, புதிதாக ஆங்கிலத்தில் ட்விட்டர்களைத் தேட விரும்புவோர் #followfriday அல்லது #FF என்று தேடினாலோ, இல்லை அந்த ஹேஷ்டேகுகளை கிளிக்கினாலோ போதும், பிறர் அறிமுகப்படுத்தும் பல ட்விட்டர்களை சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
#followfriday பயன்படுத்துவோர் வெறும் ட்விட்டர் பெயர்களை மட்டும் சொல்வதில்லை, அவர்களைப் பற்றி சிறு குறிப்பையும் சேர்க்கின்றனர். "#followfriday @techcrunch @cnet" என்று மொட்டையாக கூறாமல், "To know latest tech updates follow : @techcrunch @cnet #followfriday", என்று ட்வீட்டுகின்றனர். இதனால் #followfriday ஹேஷ்டேக் ட்விட்டர் உலகில் மிகவும் பிரபலமான ஹேஷ்டேகாகக் கருதப்படுகின்றது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இதனை ட்விட்டர் World Trending Topics ல் காணலாம். சரி தமிழ் கீச்சர்களுக்கு நாம் என்ன #HashTag செய்யலாம். ஆரம்ப காலத்தில் தமிழ் கீச்சர்களும் ஆங்கில கீச்சர்களின் பட்டிகளையே பயன்படுத்தி வந்தோம். தோழர் @TBCD (@TPKD_) அறிமுகப்படுத்திய #TNfisherman tag க்குப் பின் தமிழ் கீச்சுகளுக்கு தனி பட்டிகள் பயன்படுத்தும் எண்ணம் பரவலானது. #TNmusic , #TNeco , #TNmovies , #TNae11 என தமிழில், தமிழ் கீச்சர்களுக்காக த்வீட்டப் படுவதில் #TN முன் ஒற்று பட்டிகளில் சேர்த்துக் கொண்டோம்.

தற்போதைய தமிழ் கீச்சுலகம் மிக அதிகம் பேரை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு வாரமும் புதிய கீச்சர்களை மற்றவர்க்கு அறிமுகம் செய்யவும், அனுபவ கீச்சர்களை புதியவர்களுக்குப் பரிந்துரைக்கவும் நாமும் ஒவ்வொரு வெள்ளியன்றும் பட்டி மூலம் பரிந்துரைக்கலாம். வெள்ளிக் கிழமை தான் அடுத்து வரும் இரண்டு விடுமுறை நாள்களை கணக்கில் கொண்டு உற்சாகமாக த்வீட்டுவோம், வெள்ளிக்கிழமை தான் மிக அதிக த்வீட்கள் பகிரப்படும் நாள். எனவே அன்று #TNFF அல்லது #TNfollow என்ற பட்டியைப் பயன்படுத்தலாம். #TNfollow என்பது விளக்கமாகவும், சுருக்கமாகவும் இருக்கும்.

பதிவு : @kuumuttai
இந்த பதிவினை நண்பர்களுடன் பகிர்ந்திட கீழே உள்ள Tweet பொத்தானை அழுத்தவும்!

13 அக்., 2011

TwiTamils.com உடன் இணைந்திடுங்கள்


அன்பு நண்பர்களே,

          தங்களின் மேலான ஆதரவினால் TwiTamils.com தளத்தினை துவங்கி நடத்தி வருகிறோம், ட்விட்டர் குறித்த பதிவுகளும் , கீச்சர்களை அறிமுகம் செய்தும் , வலைபாயுதே கீச்சுகளை தொகுத்தும், ட்விட்டர் பட்டிகளின் அடிப்படையில் கீச்சுகளை தேடித் தொகுத்தும் வருகிறோம். இன்னும் மேலும் பல புதிய பகுதிகளை தளத்தில் இணைக்க உள்ளோம். தமிழ் கீச்சர்களுக்கான ஒரு முழுமையான தளமாக TwiTamils.com தனை மேம்படுத்த முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலரின் பங்களிப்பாக இவை இல்லாமல், உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் வேண்டும். ஏனெனில் இது தமிழ் கீச்சர்கள் நாம் அனைவருக்குமான தளம். தளத்தில் நீங்களும் ஒரு பதிவராக இணையலாம். அதற்கான வாய்ப்புகளைப் பற்றியே இந்த பதிவு!

     1. பதிவுகள் : ட்விட்டர் கருவிகள் , வசதிகள் , பயன்படுத்தும் முறைகள் குறித்த பதிவுகளை தமிழில் எழுதலாம். ட்விட்டர் குறித்த தகவல்கள் இணையத்தில் கடலென கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எளிய தமிழில் இலகுவாக புரிந்திடும் வகையில் தருவது நம் நோக்கம். ஒரு இணைய தளத்தில் உள்ள பதிவை அப்படியே தமிழ் படுத்தக் கூடாது, மேலும் அது குறித்து நிறைய தேடி வாசித்து , அவற்றை சோதித்துப் பார்த்த பின் உங்களது நடையில் எழுத வேண்டும்.

2. ட்விட்டர் பட்டிகள் : நம் தளத்தில் #FamousLies #140Story  .. போன்ற ட்விட்டர் பட்டிகளைக் கொண்டு வெளியிடப்பட்ட கீச்சுகளைத் தேடித் தொகுத்து வெளியிட்டு இருக்கிறோம். அது போல் தமிழ் கீச்சர்கள் எழுதும் பட்டிகளைத் தொகுத்து தரலாம்.

3. கீச்சர் விருப்பம்: புதிய பகுதியாக இணைக்க உள்ளோம். நல்ல கீச்சுகளை தேடித் தொகுத்து தருவதும், கீச்சுத் தேர்வு ஒருவரின் விருப்பமாக இல்லாமல் ஒவ்வோரின் விருப்பமாகவும் இருக்க வேண்டும் என்பதும், பல புதியவர்களின் நல்ல கீச்சுகளை நம் தளத்தின் வழியாக பரவச் செய்வதும் நோக்கம். மிக குறைவானவர்களையே நீங்கள் பின்பற்றினால் உங்கள் கவனத்திற்கு வராத அருமையான கீச்சுகளாக இருக்கும். நீங்கள் அதிகம் ரசித்த கீச்சுகளை இதன் மூலம் பகிரலாம். ஒரு பதிவிற்கு இருபது கீச்சுகள் வீதம் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் இடலாம். யாரையும் புண்படுத்தாத கீச்சுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கீச்சுகளை வாசித்து ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றையே தேர்ந்தெடுப்போம். ஆங்கில கீச்சுகளுக்கு அனுமதி இல்லை. உங்களுடைய கீச்சை நீங்களே இணைக்க இயலாது. ஒருவரின் ஒரு கீச்சுக்கு மேல் இதில் இணைக்க இயலாது, அடுத்த பதிவில் இணைத்துக் கொள்ளலாம்.

4. கீச்சர்அறிமுகம்  : பல புதிய கீச்சர்கள் மிக அழகாக கீச்சுகிறார்கள். அவர்களை நம் தளத்தின் மூலமாக பலருக்கும் அறிமுகப்படுத்தி, புகழ்ப்படுத்தும் முயற்சி இது. நீங்கள் அதிகம் ரசித்த கீச்சரை இதன் மூலம் அறிமுகப்படுத்தலாம். அவரின் கீச்சுகளில் இருந்து சிறந்த முப்பது கீச்சுகளைத் தேடி, அவரின் பெயர், இடம், சுயவிவரம், வலைப்பூ, தமிழ் ட்விட்டர் குறித்த அவர் கருத்தும் பெற வேண்டும். எடுத்துக்காட்டுகள் @balu_sv , @SoniaArun

5. கீச்சர்பதிவுகள் : நம் தமிழ் கீச்சர்களின் வலைப்பதிவுகளை குறும்படங்களை பிரபலப்படுத்தும் முயற்சி இது. நீங்கள் வாசித்து ரசித்த , தமிழ் கீச்சரின் சிறந்த பதிவொன்றை , குறும்படத்தினை பரிந்துரைக்கலாம். வாரத்திற்கு ஒன்றாக வலையேற்றுவோம். இதில் தேர்வு செய்வது தமிழ் கீச்சர்களின் வலைப்பூக்களில் இருந்து மட்டுமே இருக்கும். நகைச்சுவை , கதைகள், சமூக வலைத்தளம் குறித்த பதிவாக இருந்தால் மிக நலம்.

தமிழில் ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட பதிவர்கள் இருந்தாலும் அதில் வெகு சிலரே ட்விட்டரில் இருக்கிறார்கள். இணையத்தில் இயங்கும் தமிழர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்திடும் கருவியாக ட்விட்டரை மாற்றுவதே நம் நோக்கம். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். WordPress, Twitter , pulveli.com , Libre Office, என தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கான பல தேவைகள் உள்ளன. அது குறித்து விரிவாக எழுதுகிறேன். அவற்றிலும் நம் பங்களிப்பு தேவை.

மேலதிகமாக நமது தளத்தில் உங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் நுழைந்து(SignIn) பின்னூட்டங்களை(comments) இட முடியும். மேலும் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவின் கீழும், Tweet Buttonல் உங்களது ட்விட்டர் பெயர் இணைக்கப் பட்டிருக்கும். அதன் கீழ் உங்களது வலைப்பூ அல்லது தளத்தின் முகவரியும் கொடுக்கலாம். உங்களது பதிவு ட்விட்டரில் பகிரபட்டால் உங்களுக்கு @mention மூலம் தெரிந்து விடும். நம் தளத்தின் மூலமாக உங்களுக்கு பயன் கிடைப்பது உறுதி.

வலைபாயுதே பகுதி விகடனின் தேர்வு ஆதலால் அதைத் தவிர மற்ற அனைத்து பதிவுகளிலும் பயனுள்ள, நகைச்சுவையான, கருத்துச் செறிவுள்ள, தனி மனித விமர்சனங்கள் அற்ற, தவறான வார்த்தைகள் இல்லாத, அரசியல் கட்சிகள் பற்றி அல்லாத, யாரையும் புண்படுத்தாத கீச்சுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


Twitamils தளத்தில் பங்காற்ற விரும்பினால் @karaiyaan @vedhaLam தொடர்பு கொள்ளலாம்.

25 செப்., 2011

#DrunkersDialogues

#DrunkersDialogues என்ற பட்டி மூலம் குடிப்பவர்கள் என்னவெல்லாம் உளறுவார்கள் என நம் தோழர்கள் கீச்சுகள் எழுதினர்! அவற்றின் தொகுப்பு இங்கே


கீச்சுகளை  நண்பர்களுடன் பகிர்ந்திட கீழே உள்ள Tweet பொத்தானை அழுத்தவும்!


13 ஆக., 2011

#FamousLies ட்வீட் தொகுப்பு


ட்விட்டரில் #FamousLies என்ற பட்டி(tag)யில் நம் மக்கள் கீச்சியதில் கவர்ந்த சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்..
வாசித்து மகிழுங்கள்.

பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருப்பா...


ஒரு ரூபாய் சம்பளம்


பவர் ஸ்டார்!


ஐயோ கொல்றாங்களே.. கொல்றாங்களே..


பெண்கள்தான் அழகு


pmkram :
இங்கே அலை கடலெனத் திரண்டிருக்கும் மக்களே


ஒரே வாரத்தில் சிகப்பழகு


உங்க வீட்டுக்கு விஷேசத்துக்கு வரணும்ன்னு நினைச்சேன்.


கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால்,டீசல்,பெட்ரோல் விலை ஏற்றம்.


இப்பல்லாம் யார் சார் ஜாதி பாக்கறா


பட்சி


மொபைல சைலன்ட்டுல போட்டுடேன், இப்ப தான் பார்த்தேன்
     1 min ago


உளவுத்துறை தகவல்கள்..


நம்பிக்கை வாக்கெடுப்பு.. மந்திரிகள் வெளிநடப்பு..


மக்களோடு மட்டும் தான் கூட்டணி


சட்டத்திற்கும்,கட்சி கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டு..


பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்


வானிலை அறிக்கை


toviji :
வலைவீசி தேடினார்கள்


சே, சே பரவாயில்லை


எங்கள் கூட்டணி பலமாகவே உள்ளது..


நான் ஒரு நடுநிலைவாதி..


50 பைசா , 1 ரூவா, சில்லறை இல்ல


மத்திய அரசுக்கு கடிதம்


முதல்வர் ஆசை இல்லை


மாப்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை


கருப்பா இருந்தாலும் களையா இருப்பான்/ள்


Guess Post by கரையான்


11 ஆக., 2011

ட்விட்டரில் புதிய நண்பர்களை தேட

 

  ட்விட்டர் சக்திவாய்ந்த ஒரு சமூக ஊடகமாக பரிணமித்துள்ளது. ட்விட்டர் தளம் உரையாடல்களை அனுமதிக்கிறது. ஆனால் யாருடனாவது உரையாட நீங்க அவரை பின்தொடர (Follow) வேண்டியுள்ளது. நீங்கள் யாரையும் பின்தொடராத பட்சத்தில் உங்கள் காலவரிசை (TimeLine) வெறுமையாகத்தான் இருக்கும். ஒருமுறை நீங்கள் சிலரை தொடர்வீர்களேயானால் ட்விட்டர் என்பது உங்களுக்கு மிகப் பிடித்ததாகவும், உபயோகமானதாகவும் மாறிவிடும். உங்கள் கருத்துக்களைப் பகிரவும், கேள்விகள் கேட்கவும், இசை, செய்திகள் போன்ற பல விஷயங்களுக்கான Real time Update களைப் பெறவும் முடியும். ஆனால் நல்ல, சிறந்த ட்வீப்ஸ் (ட்விட்டர் உபயோகிக்கும் மக்கள்)’ஐ கண்டுபிடிப்பது என்பது  புதிதாய் ட்விட்டர் உபயோகிக்க தொடங்கியவர்களுக்கு கொஞ்சம் சிரமமானதாகத்தான் இருக்கும். ஆனால் இது தீர்வு இல்லாத ஒரு விஷயம் அல்ல.
  ட்வீப்ஸ்’ஐ கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். இவை உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.


     Twitter People Search : ட்விட்டர் வலைத்தளம் வழங்கும் “Built In” வசதி. இதன் மூலம் நீங்கள் தேடும் ஒருவரை எளிதில் கண்டு பிடிக்க முடியும். இது ட்விட்டர் ஹேண்டில் பெயர் மட்டுமல்லாமல் “Bio” வில் இருக்கும் அவரின் நிஜப்பெயரையும் சேர்த்து தேடுகிறது, நிஜப்பெயரை நிச்சயம் பகிரவேண்டும் என்று ட்விட்டர் எந்த ஒரு நிபந்தனையையும் விதிக்காததால் உங்கள் தேடுதல் கொஞ்சம் சிரமமாகிறது. இருந்தாலும் உங்கள் முதல் தேடுதலைத் தொடங்க இது ஒரு நல்ல இடமே. நம்முடைய விருப்பங்களின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்ட தேடல் அல்லது த்விட்டரின் மேம்படுத்தப்பட்ட தேடல் உதவலாம்.


     Tweepz : இடம், வேலை போன்ற தனிப்பட்ட விஷயங்களை ட்விட்டர் சேகரிக்காததால் எந்த ஒரு ட்வீப்ஸ் தேடுதல் தளமும் துல்லியமான தேடுதல் முடிவுகளை தருவதில்லை. இருந்தாலும் இந்த தளத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட விஷயங்களின் அடிப்படையில் நம் தேடுதலை செய்யமுடியும் (உதா. பெயர், இடம், Bio...). தேடல் முடிவுகளை இடம், தொடர்வோர் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ள முடியும். இதை போன்றதொரு தளம் TweepSearch.


      TwitDir : இதுவும் மற்றொரு தேடுதளம். இதன் மூலம் ஒவ்வொரு category பிரிவிலும் முன்னணியில் இருக்கும் நபர்களை தேட முடியும்..


     Twibs : வர்த்தக நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளின் தொகுப்பாக இந்த தளம் உள்ளது. இதனால் நேரடியாக நீங்களே அவற்றின் வாடிக்கையாளர் சேவை பகுதியை தொடர்பு கொள்ள இயலும்.


     Twellow : இந்த தளத்தின் மூலம் உங்களை போலுள்ள ட்வீப்ஸ்’ஐ கண்டறிய முடியும். இத்தளம் ஒரு டைரக்டரி’யாக செயல்படுகிறது. 6 மில்லியன் ட்வீப்ஸ் இத்தளத்தில் பதிந்துள்ளனர். குறிப்பிட்ட ப்ரோஃபைல் முதல் அனைத்து விதமான தேடல்களையும் இத்தளத்தின் உதவியுடன் செய்ய முடியும். உதா. நீங்கள் கணினித்துறை நண்பர்களை தேடுகிறீர்களே’யானால் அந்த வகையறா (Category)வில் தேடும் வசதி இத்தளத்தில் உள்ளது.


     WeFollow : இத்தளம் HashTag களின் அடிப்படையில் செயல்படுகிறது. இதுவும் ஒரு டைரக்டரி போன்றே செயல்படுகிறது. உபயோகிப்பாளர்கள் (ட்வீப்ஸ்) அவர்களின் தகவல்களை இத்தளத்தில் பதிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் மூன்று #Hashtag கில் தன்னை இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம், அதே #hashtag கில் இருக்கும் உங்களை போன்ற ட்வீப்ஸ்’ஐ எளிதில் அடையாளம் கண்டு அவர்களை தொடரலாம்


     Just Tweet It : இதுவும் ஒரு “User Created” டைரக்டரியாக செயல்படுகிறது. நமக்கு தேவைப்படும் ஆட்களை அந்தந்த வகையறா(Category)வில் தேடி அவர்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் நம்மையும்  எந்த வகையறாவிலும் இணைத்துக்கொள்ளலாம். Twellow & WeFollow ஐ போல சிறப்பாக ஒழுங்கு படுத்தப் பட்டது இல்லை என்றாலும் பொதுவான தேடல்களுக்கு இது நல்ல தளம்.


   இவை மட்டுமல்லாது த்வீப் களை நாம் பின்பற்றுவோரின் நண்பர்களின் நண்பர்களில் தேடி, குறிச்சொற்கள் மூலம் தேடி பரிந்துரை செய்யும் சில தளங்கள் உள்ளன.
      1. Who To Follow
      2. Twubble
      3. Twitterel
      4. who should i follow;
      5. Mr.Tweet
      6. Twitter Adder
      7. Monitter
      8. Twubble


   சமீபகாலமாக ட்விட்டரை உபயோகிக்கும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களைப் போலில்லாமல் ட்விட்டர் பல வகைகளில் உபயோகமானதாக உள்ளதால் பல புதியவர்கள் தங்களை ட்விட்டரில் இணைத்து வருகின்றனர். கஸ்டமர் சர்வீஸ் முதல் வேலை தேடுவது வரை பல அசாதாரண உபயோகங்களுக்கும் ட்விட்டர் பயன்படுகிறது. நம் ஊரில் நம் அருகில் இருக்கும் மக்களுடன் நல்ல தொடர்பிலிருக்கவும் ட்விட்டர் உதவுகிறது. நாம் எங்கிருந்தாலும் நம் ஊரில் நடக்கும் செய்திகள், அரசியல் இன்னும் பல விஷயங்களை இதன் மூலம் அறியலாம். உதாரணமாக நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் ஒருவரால் உங்களுக்கு சென்னையில் இருக்கும் ஒரு சிறந்த உணவகத்திற்க்கான வழியைக் கூற இயலாது. இதற்கு சென்னையில் வசிக்கும் ஒருவரின் உதவி உங்களுக்கு தேவைப்படுகிறது. உங்கள் அருகாமையில் இருக்கும் ட்வீப்ஸ்’ஐ கண்டறிவதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.


     Twitter Search : அருகாமை ட்விட்டேர்களை தேட இருக்கும் வழிகளுள் ஒன்று, ட்விட்டர் தேடல். ட்விட்டர் தேடலின் “Advanced Search” இல் உள்ள “Near this place” ஆப்ஷனின் மூலம் நமது இந்தத் தேடல் எளிதாகிறது. ட்விட்டர் தேடலில் உங்களின் நகரத்தின் பெயரை கொடுத்து தேடுவதன் மூலம் ட்விட்டரின் “Real time stream” இல் அந்த நகரம் தேடப்பட்டு தேடலின் முடிவுகள் உங்களுக்கு கொடுக்கப்படும். தேடல் முடிவுகள் ட்வீப்ஸ்’களின் Bio வில் இருக்கும் நகரத்தின் அடிப்படையிலும், ஒருவேளை அவர்கள் போனிலிருந்து ட்வீட்’டும் பட்சத்தில் அவர்களின் இடத்தினையும் சார்ந்திருக்கும்.


     Twellowhood : Twellow தளத்தில் வழங்கப்படும் ஒரு டைரக்டரி வசதியாகும். Twellow என்பது ட்விட்டரின் Yellow Pages போல் ஒரு டைரக்டரியாக செயல்படுகிறது. இதன் மூலம் ஒரு பெயரையோ, தலைப்பையோ தேட முடியும். TwellowHood என்பது Twellow டைரக்டரியின் ஒரு இடம் சார்ந்த தேடலுக்கு வழிவகை செய்கிறது. இதன் மூலம் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ட்விட்டர் உபயோகிப்பாளர்களைத் தேட முடியும்.  உபயோகிப்பதற்கு எளிதான இத்தளத்தில், தோன்றும் வரைபடத்தில் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கிப் பார்ப்பதன் மூலம் அந்த இடம் சார்ந்த ட்விட்’டுகளையும் ட்விட்டர்’களையும் அடையாளம் காண முடியும். மேலும் அவர்களின் சமீபத்திய ட்வீட்டுகளை பார்த்து அவர்களை நீங்கள் தொடரவும் இத்தளம் வழிவகை செய்கிறது.


     Local Tweeps : ஹேஷ் டேக்’கின் உதவியோடு ட்வீப்ஸ்’ஐ ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு ட்விட்டரும் இத்தளத்தில் தங்களின் பின்கோட்’ஐ இணைத்துக்கொண்டு, பிறகு நம் இருப்பிடம் சம்மந்தப்பட்ட ட்வீட்டுகளில் #lt என்னும் ஹேஷ் டேக்’கை இணைக்க வேண்டும். இத்தளம் இத்தகைய ட்வீட்டுகளை கண்டறிந்து அவற்றை இடம் வாரியாக வகைப்படுத்தி அத்தளத்தில் அவ்விடத்திற்கான பகுதியில், அந்த ட்வீட்’களை தொகுக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட இடத்தை சார்ந்த ட்வீப்ஸ்’ஐ எளிதில் அடையாளம் காண முடியும்.


     TwitterLocal : Adobe AIR (it will run on Windows, Mac, and Linux) ஆகும். ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்த ட்வீட்’டுகளை கண்டறிந்து இத்தளம் தொகுக்கிறது. ட்விட்டரின் Real-time Stream லிருந்து ட்விட்டர் தேடலின் அடிப்படையில் ஒரு இடத்தை தேடி, அதற்கான ட்வீட்’களை தொகுக்கிறது. நீங்கள் உங்கள் இடத்தை இதில் பகிர்வீர்களேயானால், இத்தளம் உங்கள் இடம் சார்ந்த, அருகாமைலிருந்து செய்யப்படும் ட்வீட்ஸ்’ஐ உங்கள் பார்வைக்கு எடுத்து வருகிறது. இதன்மூலம், உங்களை போலுள்ள, உங்கள் அருகாமை ட்வீப்ஸ்’ஐ கண்டறிந்து அவர்களை உங்களால் தொடர முடியும்.


     Nearby Tweets : ட்விட்டர் தேடலின் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதியாகும். இத்தளம் உங்களின் இடத்தை அதுவாகவே கண்டறிந்து, உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ட்வீட்ஸ்’களையும், ட்வீப்ஸ்’களையும் தொகுக்கிறது. இத்தளத்தில், உங்களால் இடம், இடத்தை சுற்றி தேடவேண்டிய சுற்றளவு, தேடவேண்டிய முக்கிய வார்த்தைகள் போன்றவற்றை மாற்றிக்கொண்டு உங்கள் தேடலை மேம்படுத்த முடியும்,. இதன் மூலமும் உங்கள் அருகாமை ட்வீப்ஸ்’ஐ நீங்கள் தொடர முடியும். இதைப் போன்று மற்றதொரு தளம் Chirp City


     TwitterHolic : உங்கள் உள்ளூர்/அருகாமை டாப்-ட்விட்டர்களை அறிந்துகொள்ள முடியும். உங்களின் TwitterHolic பக்கத்திற்கு சென்றால் உங்கள் அருகாமையில்/உள்ளூரில் உங்களின் ரேங்க் தெரிவிக்கப்படும். அதனருகில் இருக்கும் இடத்திற்கான சுட்டியை க்ளிக்கி உங்கள் அருகாமையில் இருந்து ட்வீட்டும் டாப்-ட்வீப்ஸ்’ஐ கண்டறிய முடியும்.


     Local Follow : இத்தளத்தின் மூலம் location, bio, name, keyword அடிப்படையில் த்வீப் களை தேட முடியும்.


     City Tweets : உலகின் பல்வேறு நகரங்களை சேர்ந்த த்வீப் களை தேடி தொகுத்து உள்ளார்கள். கிட்டத்தட்ட 52 நகரங்கள் அகர வரிசை படுத்தப்பட்டுள்ளன. உங்களது நகரத்தையும் இணைத்து கொள்ள வேண்டுகோள் விடுக்கலாம்.

   Tweet Up என்பது ட்விட்டர் மூலம் கிடைத்த நண்பர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒரு  கூட்டம் போடுவதாகும். இதன் மூலம் புதிய நட்புகள் வளரவும், நமது நட்பை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியும். அதற்கான சில வழிகள் இங்கே.

     Twtvite : அழைப்பு சார் ட்விட்டர் சேவை ஆகும். இதிலிருக்கும் பல ட்வீட்-அப் களின் அடிப்படையில் உங்கள் நகரத்திலும் ஒரு ட்வீட்-அப் ஐ நிகழ்த்திட முடியும். இத்தளம் நீங்கள் அழைப்பு விடுத்த நபர்களுக்கு நினைவூட்டல் ட்வீட் அனுப்பி விடும்.

     Meetup : இத்தளத்தில் ட்வீட்-அப்’பிற்கென்றே தனி பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரிலும் நடக்கும் ட்வீட்-அப்’கள் இதில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இதில் பதிந்து கொள்வதன் மூலம் நமக்கும் ட்வீட்-அப்கள் குறித்த அப்டேட்கள் கிடைக்கப் பெறலாம்.

   ஐ-போனிற்க்கான ட்விட்டர் அப்ளிகேசன்’கள் பலவற்றிலும் அருகாமையிலுள்ள ட்விட்டர்களையும், ட்விட்டுகளையும் கண்டறியும் வசதி செய்யப்பட்டுள்ளது. எல்லா அப்ளிகேசன்’னும் செயல்படும் விதம் ஒன்றே. உங்களுடைய இடத்தை(Geo Location) கண்டறிந்து அதனடிப்படையில் தேடுதலை செய்கிறது. இடம் சார்ந்த தேடல்களை செய்ய வல்ல இலவச ட்விட்டர் அப்ளிகேசங்கள் சில : Twinkle - TwitterFon

   மேற்கண்ட தளங்கள் தமிழகத்து த்வீப் களை தேட உதவுமா என்பது ஐயமே! ஆதலால் தமிழ் த்வீப் களுக்கென தனியாக ஒரு டைரக்டரி எழுதிக் கொண்டுள்ளோம். விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த தொகுப்பினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திட கீழ்காணும் ட்வீட் பொத்தானை அழுத்தவும்.

  Guest Post by Arjun

5 ஆக., 2011

ட்வீட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்


ட்வீட்டர் (Twitter) இன்றைய இணைய உலகில் பிரபலமாகி விட்ட சமூக வலைத்தளம்., நிமிடத்துக்கு நிமிடம், இருக்கின்ற இடத்திலிருந்தே, உங்கள் நண்பர்களுக்கு நிகழ்கால உங்களின் உலகை காட்டிக் கொண்டே இருக்கலாம். நிகழ்காலத்தை காட்டுவது வார்த்தைகளாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை. புகைப்படங்களாகவும் இருக்கலாமே. Smart Phones அலைபேசிகள் வழி  ட்வீட்ட தொடங்கி விட்டோம். அதில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எப்படி? இதோ சில எளிய வழிமுறைகள்

ட்விட்டர் பக்கத்தில் நேரிடையாக புகைப்படங்களை இணைக்க முன்பு வழியில்லாவிட்டாலும், இப்போது இயலும். ட்விட்டர் முகப்பு பக்கத்தில் ட்வீட் பெட்டிக்கு கீழே ஒரு கேமரா போன்ற ஒரு சிறிய icon காணப்படும் அதை சொடுக்குங்கள். பின்பு திறக்கும் விண்டோவில் நீங்கள் பகிர நினைக்கும் போட்டோவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள், அந்த படத்தின் Preview உங்களுக்கு தெரியும். வாசகங்கள் ஏதும் சேர்க்க விரும்பினால் அதை சேர்த்து எப்பொழுதும் போல Tweet பொத்தானை அழுத்தினால் உங்கள் போட்டோ பகிரப்படும்

பல்வேறு இணையதளங்கள் இதே வசதிகளை உங்களுக்கு அளிக்கின்றன. ஒவ்வொரு நாளும், புதிய புதிய இணையதளங்கள், பயன்பாட்டுக்கு வருகின்றன., கீழ்க்கண்ட சில வலைத்தளங்களில், மிக எளிதாக உங்கள் புகைப்படங்களை வலையேற்றிவிடலாம்.

TwitPic : பல்வேறு பிரபலங்கள் உட்பட அதிகமான ட்வீட்டர் பயனாளர்களை கொண்டுள்ள இந்த வலைத்தளம், அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றில் விமானம் விழுந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ( http://twitpic.com/135xa ) ஒருவர் பகிர்ந்ததால் மிகவும் புகழ்பெற்றது. உங்கள் ட்வீட்டர் ஐடியை வைத்து உள் நுழைந்து, உங்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வலையேற்றிவிடலாம். முதல்முறையாக, உங்கள் ட்வீட்டர் பயனர் கணக்கை (User Account) வைத்து உள்நுழையும்போது, அதை அங்கீகாரம் (Authorize) செய்ய சொல்லி ட்வீட்டர் கேட்கும். அங்கீகரித்து உள்நுழைந்து, Upload என்ற பொத்தானை அழுத்தினால், உங்கள் படங்களை கணினியில் இருந்து வலையேற்றுவதற்க்கான ”Browse” பொத்தானையும், கீழே அந்த புகைப்படம் சம்பந்தமான கருத்துக்களை சொல்வதற்க்கான பெட்டியை காணலாம். நிமிடங்களில் வலையேற்றி, ட்வீட்டரிலும் பகிர்ந்துகொள்ள ”Post To Twitter Account” என்பதை தெரிவு செய்தால் போதுமானது.


YFrog : மிகவும் புகழ்பெற்ற ImageShack நிறுவனத்தினரால் நடத்தப்படும் இந்த தளமும், மிகவும் எளிமையான வழிமுறைகளை கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட படி, உங்கள் ட்வீட்டர் பயனர் கணக்கை கொண்டு உள் நுழையுங்கள், புகைப்படத்தை வலையேற்றம் செய்யுங்கள், ட்வீட்டரில் பகிர்ந்து கொள்ளுங்கள்!!


TweetPhoto : Plixi என URL-ல் இயங்கி வந்த இந்த தளம், தற்போது Lockerz என்ற URL-ல் இயங்குகிறது Seesmic போன்ற புகழ்பெற்ற ட்வீட்டர் ஒருங்கிணைப்பு தளங்களால் பயன்படுத்தப்படும் இந்த தளம், FaceBook மற்றும் ட்வீட்டரில் ஒரே நேரத்தில் படங்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
Pikchur : பல்வேறு இயங்கு தளங்களில் சிறப்பாக செயல்படும் இந்த தளம், FaceBook, Twitter, FriendFeed, Tumbler மற்றும் Flickr போன்ற சமூகவலைத்தளங்களில், உங்கள் புகைபடங்களை ஒருங்கிணைந்து பகிர பயபடுகிறது. தனியாக பயனர் கணக்கு தொடங்கியோ அல்லது, ட்வீட்டர் / பேஸ்புக் ஆகியவற்றின் பயனர் கணக்குகளை கொண்டோ உள் நுழைந்து, படங்களை வலையேற்றலாம்.


TwitGoo : பல்வேறு ட்வீட்டர் பயன்பாட்டுதளங்கள் அல்லது ட்வீட்டர் நிரலிகளால் (Third Party Tools) பயன்படுத்தப்படும் இந்த தளம், Mac மற்றும் BlackBerry இயங்குதளங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடியது.

பிற வலைத்தளங்களின் மூலமாக ட்வீட்டரில் புகைப்படங்கள் பகிர்வதைப் பார்த்தோம். நிமிடங்களில், மின்னஞ்சல் மூலமாகவும், உங்கள் கைபேசியில் எடுத்த புகைப்படங்களை குறுஞ்செய்தி மூலமாகவும் கூட ட்வீட்டரில் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கும் பல வழிகள் உள்ளன.


TwitXR : உங்கள் கைபேசியிலிருந்தே, அதில் உள்ள புகைப்படங்களை வலையேற்ற உதவும் இத்தளம், பல்லாயிரம் ட்வீட்டர் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. ட்வீட்டர் மட்டுமல்லாது, ஃபேஸ்புக், ப்ளாக், ஃபிளிக்கர் ஆகியவற்றிலும் இதன் மூலம் படங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், விண்டோஸ் கைபேசிகள், நோக்கியா மற்றும் மோட்டோரோலா வகை கைபேசிகள் சிறப்பாக செயல்படக்கூடியது. உங்கள் கைபேசியின் உலாவியில் m.twitxr.com என்ற வலைப்பக்கம் சென்று உங்கள் பயனர் கணக்கு மூலம் புகைப்படங்களை வலையேற்றலாம். உங்களுக்கென்று தனியாக ஒரு பயனர் கணக்கு உருவாக்கினால், உங்களுக்கான மின்னஞ்சல் முகவரியை இந்த தளம் வழங்கும். அந்த மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் புகைப்படங்களை இணைத்து, மின்னஞ்சல் Body பகுதியில், புகைப்படம் சம்பந்தமான உங்கள் கருத்துக்களை 140 எழுத்துக்களில் குறிப்பிட்டு, மின்னஞ்சல் அனுப்பினால் போதும் உங்கள் புகைப்படம் ட்வீட்டரில் பகிரப்படும்.


TwitPic : மேலே பார்த்த இந்த வலைத்தளம், உங்களுக்கென்று தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கும். அதாவது, உங்கள் ட்வீட்டர்பயனர்கணக்கு.XXXX@twitpic.com என்று இருக்கும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் படங்களை இணைத்து, Subject பகுதியில் 140 எழுத்துகளில் உங்கள் கருத்துக்களை குறிப்பிட்டு, மின்னஞ்சல் அனுப்பினால், உங்கள் ட்வீட்டர் பக்கத்தில், புகைப்படம் பகிரப்படும்


MobyPicture : மிகவும் இலகுவான, அதே சமயம் குறைந்த பாதுகாப்பு கொண்ட இந்த முறையில், உங்கள் புகைப்படங்களை ட்வீட்டரில் பகிர்ந்து கொள்ளலாம். ட்வீட்டர் பயனர்கணக்கு.பயனர்குறிச்சொல்@mobypicture.com (TwitterUserName.TwitterPassword@mobypicture.com) என்பதற்க்கு மின்னஞ்சல் அனுப்பினால், உங்கள் புகைப்படங்கள் நிமிடங்களில் உங்கள் ட்வீட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுவிடும். உங்கள் ட்வீட்டர் கணக்கின் பயனர் கணக்கு விபரங்களை குறிப்பாக குறிச்சொல்லை பகிர்ந்து கொள்வதால், ஒரு முறைக்கு / இரு முறை சோதித்த பின்னர் பயன்படுத்தவும்.
நீங்கள், மேலே குறிப்பிட்டவைகளை காட்டிலும் வேறு ஏதேனும் சிறப்பான முறையில் ட்வீட்டரில் படங்களை பகிர்ந்து கொள்கிறீர்களா? எங்களுக்கு சொல்லுங்கள்.Guest Post By Santhappan

3 ஆக., 2011

தமிழ் எழுதும் வழிகள்

தமிழில் எழுதலாம் வாருங்கள்! இப்பக்கம் இணைய இணைப்புடனோ, இல்லாமலோ கணிப்பொறி மற்றும் அலைபேசியில் தமிழ் ஒருங்குறி (unicode) யில் எழுத சாத்தியப்பட்ட (யாமறிந்த) வழிகளின் தொகுப்பாகும்!

1. தங்கள் அலைபேசியில் தமிழ் வாசிக்க opera mini தரவிறக்கிடுங்கள். அதன் address bar ல் opera:config அல்லது config: என தட்டச்சுங்கள், வரும் settings பக்கத்தின் அடியில் Use Bitmap fonts for complex scripts என இருக்கும் அதற்கு yes என தேர்வு செய்து save செய்திடவும். இப்போது உங்கள் அலைபேசியின் opera mini உலவியில் தமிழ் பக்கங்களைப் படிக்க இயலும். அறிக opera mini தமிழில் படிக்க மட்டுமே உதவும். உங்கள் அலைபேசியில் தமிழ் மொழி உள்ளீடாக இருந்தால் மட்டுமே தமிழில் உங்களால் எழுத இயலும். அலைபேசியில் தமிழ் எழுதும் வழிகளை கீழே தொகுத்துள்ளேன். Skyfire உலவியில் தமிழ் வாசிக்க இயலும் ஆனாலும் அது அவ்வளவு சிறப்பாக இல்லை. மற்றைய ucweb , snaptu etc போன்றவை ஒருங்குறியை ஆதரிப்பது இல்லை. அலைபேசியின் மொழிகளை மட்டுமே ஆதரிக்கின்றன.

2. தங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி தமிழ் எழுத கீழ்காணும் மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்
 i. Indian Language Input Tool: MSN ILIT for XP  , Windows 7
 v. Adhiyaman
 vii. Visai Tamil
 viii. Google IME
 ix. Azhagi
 x. Min Olai
 xi.Suratha save this page for offline use
 xii. Tamil99 keyboard Softwares

3. இணைய இணைப்பில் தமிழ் எழுத கீழ்காணும் வழிகளை தெரிவு செய்யலாம்
a) Google Transliteration IME . தமிங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழுக்கு மாற்றிடலாம். இதை உங்கள் இணைய உலவியில் இணைக்கும் முறை help here
     b) கூகிள் குரோம் உலவிக்கான Extension
     c) பயர்பாக்ஸ் உலவிக்கான TamilVisai நீட்சி
     d) யாஹூ Tamil99 தட்டச்சு Widget
     e) Epic Browser தமிழ் ஆதரிக்கிறது
     f) அதியன் Firefox PLugin
     g) இணைய தமிழ் எழுதிகள் :
iii. UCedit
vii. Branah
தமிழ் ட்விட்டர் portal கள்
     h) அலைபேசிக்கான தமிழ் எழுதிகள்
          i. Eegarai
அலைபேசியில் ஈகரை யந்திரம் போன்ற தமிழ் எழுதிகளை பயன்படுத்த ucweb mobile browser தான் சிறந்தது! Key combination கள் இங்கே
iv. Google's Script Converter
இவை இரண்டும் opera mini ல் எளிதாக உள்ளன.

4. உபுண்டு 10.x களில் software manager - synaptic manager சென்று scim ஐ நிறுவுக. உபுண்டு 11.x களில் iBus நிறுவுக. மேலும் Tabuntu அல்லது Tamil Open Office யினைத் தேர்ந்தெடுக்கலாம்

5. விண்டோஸ் இயங்குதள கணினிகளில் இருக்கும் OSK (ON Screen KeyBoard) தனை தமிழ் எழுதியாக மாற்றிக் கொள்ளலாம் வழிமுறைகள் Windows XP ல் Windows 7 ல் . அதற்கு முன் கணினியில் ஒருங்குறி அமைத்திடுக help here

6. Mac கணினிகளில் தமிழ் தட்டச்ச :
- settings (இடது மூலையில் உள்ள Apple icon)
- system preferences
- Language & Text
- Edit List (list of language options)
- check தமிழில்
தமிழ்ஆங்கிலம் மாறிக்கொள்ள Alt+Space யினை அழுத்தவும். 2004 Mac OS 10.4 இயங்கு தளத்திலிருந்து முரசு அஞ்சல் இணைத்தே வெளியிடப்படுகிறது

7. அலைபேசிக்கான தமிழ் எழுதிகள் :
 a) ஐபோன் / ஐபாட் :
 i. Sellinam  முகப்பு பக்கம் here
 ii. Tamil SMS
 b) ஆண்ட்ராய்ட் :
 i. Tamil Visai 
தமிழ் எழுத்துரு இங்கே எழுதியவர் கிருஷ்
 c) நோக்கியா :
 i. IndiSMS  Cnet Link
 ii. IndiSMS  GetJar Link
 iii. Panini Keypad .sis
 iv. Tamil SMS
பெரும்பாலான நோக்கியா அலைபேசிகளில் தமிழ் எழுத இயலும். அப்படி தமிழ் இல்லையென்றால் IndiSMS பயன்படுத்தலாம் N series அலைபேசிகளில் சிறப்பாக வேலை செய்யும். அல்லது அருகிலுள்ள Nokia Care சென்று தங்கள் அலைபேசிக்கு தமிழ் உள்ளீடு செய்து கொள்க.
 d) சோனி எரிக்சன் :
 i. Panini Tamil .jar file
 iii. Omnius-Server
 iv. IndiSms
சோனியில் தமிழ் ஆதரவு அதிகம் இல்லை. மேற்கண்ட Language File ஐ உள்ளிட FirmWare Update செய்ய வேண்டும். Omnius server மூலம் Flash செய்து தமிழ் உள்ளிடலாம் ஆனால் அது சிரமமான வேலை. Panini Tamil .jar மென்பொருள் Java அலைபேசிகளில் உள்ளிட இயலும். நான்காவதாக கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் IndiSms ன் அனைத்து version களும் கொடுக்கப்பட்டுள்ளது. Nokia, Sony, Samsung, Motorola, LG போன்ற அலைபேசிகளுக்கு. இவற்றின் மூலம் தமிழ் எழுதினாலும் அதை preview செய்து பார்க்க TamilTweet தேவைப்படும் , வடிவமைத்த தோழர் கிருபா சங்கர்  அவர்களுக்கு நன்றி.
QuillPad என்றொரு மென்பொருள் உள்ளது. இலவசமல்ல. சோதித்து பார்க்கப்படவில்லை. மிக மகிழ்ச்சியான சேதி கூகிள் தமிழ்  மொழிபெயர்ப்பை துவங்கி விட்டது. வார்த்தை அமைப்புகள் சிறப்பாக இல்லை. பிற்காலத்தில் இன்னும் சிறப்பாக வரும் என நம்பலாம்.
e) ப்ளாக் பெர்ரி :  தமிழ் உள்ளிடும் முறை விளக்கம் இங்கே

8. தமிழ் உள்ளீடுள்ள அலைபேசிகள் :
GPRS:
i. Nokia C3,C5 (Install Language File! Tested!)
ii. Nokia N73(Using IndiSMS, Tested!)
iii. Sony j108i
iv. Nokia 6030
Non-GPRS:
i. Nokia 1650
ii. Nokia 1280
iii. Nokia 5030
iv. Nokia 1616
v. Nokia 2690
vi. Nokia 2700
vii. Nokia 2370
viii. Nokia 5130

9. ஒருங்குறி உள்ளீட :
 ஒருங்குறி font களை இங்கே தரவிறக்கி கொள்ளலாம் Linux  மற்றும் Windows . ஒருங்குறி எழுத்துருகளை உள்ளிடுவதில் சிரமம் இருந்தால் முதலில் Supported Files  களை நிறுவிக்கொள்ளவும் . விண்டோஸ் அல்லாத பிற இயங்குதளங்களுக்கும் WikiPedia Help Here   தமிழ் எழுதி பழக தட்டச்சு பலகை இங்கே.
தமிழ் எழுத வேறு வழிகள் இருப்பின் தயை கூர்ந்து தெரிவிக்கவும். இந்த பதிவை தொகுத்தவன் மட்டுமே நான், நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களின் உதவியோடு தான் இது சாத்தியப்பட்டது. தமிழில் எழுதுங்கள் த்விட்டுங்கள். ட்விட்டரை தமிழகத்தின் கட்டற்ற ஊடகமாக்கலாம்.
தயை கூர்ந்து இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் தமிழில் எழுதச்செய்யுங்கள். RT செய்க
Post By Karaiyaan